ஆ.ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்

104028பார்த்தது
ஆ.ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்
2ஜி வழக்கில் சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 2ஜி வழக்கில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 2ஜி வழக்கில் இருந்து 2018ஆம் ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 17 பேரின் விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தார்.
அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் மூலம் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இதன் அடிப்படையில்தான் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்னர். பின்னர் அனைவருமே ஜாமீனில் விடுதலையாகினர்.

தொடர்புடைய செய்தி