காஞ்சிபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் யார்..?

589பார்த்தது
காஞ்சிபுரத்தில் போட்டியிடும் வேட்பாளர் யார்..?
பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் முதற்கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. திண்டுக்கலில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு, ஆரணியில் அ.கணேஷ்குமார், கடலூரில் இயக்குநர் தங்கர்பச்சான், மயிலாதுறையில் ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த முறை கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடப் போவதில்லை என கூறப்படுகிறது. அதே போல்,
காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி