தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

563பார்த்தது
தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
தேமுதிகவின் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைமைக் கழகம் இன்று பிற்பகல் 12:30 மணியளவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் மத்திய சென்னை தொகுதியில் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் போட்டியிட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி