பாமக வேட்பாளர் பட்டியல்.. அன்புமணி மிஸ்ஸிங்

585பார்த்தது
பாமக வேட்பாளர் பட்டியல்.. அன்புமணி மிஸ்ஸிங்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், அரக்கோணம், ஆரணி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிகிறது.