7வது முறையாக தேசிய விருது பெறும் ஏ.ஆர். ரஹ்மான்

65பார்த்தது
7வது முறையாக தேசிய விருது பெறும் ஏ.ஆர். ரஹ்மான்
70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகளை பொன்னியின் செல்வன் படம் பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர் பெறும் 7வது தேசிய விருதாகும். மேலும் பொன்னியின் செல்வன், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு ஆகிய விருதுகளையும் வென்றுள்ளது.

தொடர்புடைய செய்தி