மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மர்மமாக உள்ளது. சாந்தா சர்மா என்ற பெண்ணுக்கு ஷ்ரேயான்ஸ் (8) என்ற மகன் இருந்தார். மேலும் சாந்தா சர்மா ஓரின சேர்க்கையாளர். இவருக்கும் இஷ்ரத் பர்வீன் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் மகன் ஷ்ரேயான்ஸ், தனது தாயையும், அப்பெண்ணையும் பாலியல் உறவில் இருந்தபோது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் தாய் மற்றும் அவரது பெண் காதலியும் சேர்ந்து, சிறுவனை கொடூரமாக கொன்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.