அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வசித்துவரும் அதே பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகுதான் விவரம் பெற்றோருக்குத் தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோகுல்ராஜை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.