உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பீகார் நோக்கி ராட்சத மலைப்பாம்பு ஒன்று டிரக்கின் இன்ஜினுக்குள் மறைத்து 98 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளது. இந்நிலையில், டிரக்கின் பானெட்டுக்குள் ராட்சத மலை பாம்பு சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மலை பாம்பு டிரக் இன்ஜினில் பயணித்ததும், இந்தப் பயணம் முழுவதும் ஓட்டுநரின் கவனத்திற்கு வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது வன அதிகாரிகள் மலைப்பாம்பை மீட்டுள்ளனர்.