அறுந்து விழுந்த ரயில்வே கிராசிங் கேட்

72பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரயில்வே கிராசிங்கில் ஏராளமான வாகன ஓட்டிகள் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது மினி லாரி மோதியதில் கிராசிங் கேட் அறுந்து, பைக்கில் நின்று கொண்டிருந்த ஒருவர் தலையில் விழுந்தது. இதனால், அந்த நபர் பலத்த காயமடைந்தார். பாதிக்கப்பட்ட நபரை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி