மாற்றுத்திறனாளி சிறுவனை தாக்கிய பெண் (வீடியோ)

67பார்த்தது
அமெரிக்காவின் கொலராடோவில் நடந்த கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன, லிட்டில்டன் பப்ளிக் பள்ளியின் உதவியாளர் கியாரா ஜோன்ஸ் என்பவரால் பேருந்தில் தாக்கப்பட்டான். கியாரா அந்த சிறுவனை இரக்கமில்லாமல் அடித்துள்ளார். இதனால், சிறுவனின் கால் மற்றும் கையின் கட்டைவிரல் முறிந்துள்ளது. கண்ணிலும் காயம் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்தது. மேலும் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி