"கலைஞரின் பயோபிக்-ல் நடிக்க ஆசை"

61பார்த்தது
"கலைஞரின் பயோபிக்-ல் நடிக்க ஆசை"
வாய்ப்பு கிடைத்தால் கலைஞரின் பயோபிக் திரைப்படத்தில் நிச்சயம் நடிப்பேன் என நடிகர் ஜீவா பேட்டியளித்துள்ளார். கலைஞரின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜீவாவிடம், "கலைஞருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுத்தால், அதில் நடிப்பீர்களா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நிச்சயமாக அந்தப் படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் ஐயா கேரக்டரில் நடிக்க ஆசை. ஏனென்றால் சமீபத்தில் தெலுங்கில் அதே போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சர். ஆனால் கலைஞர் வரலாற்றைப் படமாக எடுப்பதை விட வெப் சீரிஸாக எடுத்தால் சரியாக இருக்கும். அதைப் பா.விஜய்யே இயக்குவார் என்று நினைக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி