நீச்சல் குளம் போல மாறிய பேருந்து நிலையம்

546பார்த்தது
நீச்சல் குளம் போல மாறிய பேருந்து நிலையம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல இலும்பூர் 82 மி.மீ., அன்னவாசல் 69 மி.மீ, குடுமியான்மலை 67 மி.மீ., மழையை பெற்றுள்ளன. தொடர்ந்து மூன்றாவது நாளாக விராலிமலையில் மழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பேருந்து நிலையம் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்பதால் நீச்சல் குளம் போல காட்சியளிக்கிறது.

தொடர்புடைய செய்தி