சென்னையில் கடந்த திங்கள்கிழமை இரவு மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஐடி நிறுவனத்தில் 25 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவர் ஒரு தெருவில் சென்றுகொண்டிருக்கும்போது அவரை பிள்ளை கடத்துபவர் என்று சந்தேகப்பட்டு அவரது ஆடைகளை களைந்து கம்பத்தில் நிர்வாணமாக கட்டி வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.