60 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை

83பார்த்தது
நாகப்பட்டினம் பாப்பாகோவில் தர்காவில் தங்கியிருந்த 60 வயது மூதாட்டியை, குமரவேல் என்ற இளைஞர் லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பைக்கில் செல்லும்போதே அந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தகாத முறையில் தொட்டு அதிகமாக பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மூதாட்டி பைக்கில் இருந்து குதித்து தப்ப முயன்றுள்ளார். கீழே குதித்த மூதாட்டி மீது, குமரவேல் தாக்குதல் நடத்தியதுடன் பைக்கை ஏற்றி கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி