டெல்லியை சேர்ந்த 55 வயதான பெண்ணுக்கு சுனில் (35) என்ற நபருடன் நட்பு ஏற்பட்டது. கடந்த ஜூன் 20-இல் அப்பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்த சுனில் அவருக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து சீரழித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பியோடினார். சம்பவம் தொடர்பாக போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என கூறப்பட்ட நிலையில் கடந்த அக். 1-ல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.