தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத ஜூலை 18 முதல் ஜூலை 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் - ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் - ரூ.70 செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 26, 27ஆம் தேதிகளில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு: https://tnegadge.s3.amazonaws.com/notification/ESLC/1720593490.pdf