தென்காசி செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்-ஜெயலட்சுமி தம்பதிக்கு 8 வயதின் அசோக் என்ற மகன் இருந்தார். அசோக், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். மகன் இறப்பை தாங்க முடியாத செல்வகுமார், ஓடும் ரயிலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். செல்வகுமாரின் உடலை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.