5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் பலி

51பார்த்தது
5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் பலி
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு நேற்று (ஜூலை 26) தகவல் வெளியிட்டது. கனடாவில் அதிகபட்சமாக 172 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவரங்களை மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார். அமெரிக்காவில் 108 பேரும், இங்கிலாந்தில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும், ரஷ்யாவில் 37 பேரும், ஜெர்மனியில் 24 பேரும், உக்ரைனில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி