நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் மாதேஷ் (6) பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஏப்ரல் 6) நள்ளிரவு அடித்த சூறைக் காற்றில் தென்னை மரத்தின் ஓலைகள் மின்சார ஒயர்கள் மீது விழுந்தன. காலை வரை மின்சாரம் துண்டிக்கப்படாத நிலையில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தான். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சிறுவனின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.