ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைவரது பார்வையும் துணை ஜனாதிபதி வேட்பாளரை நோக்கியே உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த வாரம் ஆறு பேரை ஹாரிஸ் பேட்டி எடுக்கவுள்ளார். போட்டியில், கவர்னர்கள் ஆண்டி பெஷியர் (கென்டக்கி), ஜேபி பிரிடேகர் (இல்லினாய்ஸ்), ஜோஷ் ஷாபிரோ (பென்சில்வேனியா), டிம் வால்ஸ் (மின்னபோட்டா), அரிசோனா செனட்டர் மார்கெல்லி மற்றும் போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக் ஆகியோர் உள்ளனர்.