பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைப்பு

60பார்த்தது
பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைப்பு
ஜூன் 20-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவார் என கூறப்பட்ட நிலையில் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி