தமிழ்நாட்டில் ஏற்கனவே 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூரிலிருந்து விருத்தாச்சலம், தஞ்சையில் இருந்து கும்பகோணம், கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து ஆத்தூர், திருவண்ணாமலையிலிருந்து செய்யாறு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்க குரல்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.