ம.பி: தேவாஸ் மாவட்டம் நயாபுராவில் பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4.45 மணியளவில் எதிர்பாராத விதமாக தரைத்தளத்தில் உள்ள பால் கடையில் பற்றிய தீ மளமளவென 2-வது மாடி வரை பரவியது. இக்கோர தீ விபத்தில், அதே வளாகத்தில் 2-வது மாடியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தினேஷ் (35), காயத்ரி (30), இஷிகா (10) மற்றும் சிராக் (7) மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்துள்ளனர்.