மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மதுப்பழக்கம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சியில் செந்தில் குமாரின் மனைவி வீரசெல்வி தனது 2 மகள்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.