கடல் அலையில் சிக்கி 5 பேர் பலி

70பார்த்தது
கடல் அலையில் சிக்கி 5 பேர் பலி
ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களில் மாமல்லபுரம் கடலில் சிக்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்த 10 மாணவர்களை அலை இழுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு ஸ்கூபா பயிற்சி கொடுப்பவர்கள் 5 மாணவர்களை உடனடியாக உயிரோடு மீட்டனர். ஆனால், நேற்று ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை ஒருவரும் தற்போது 3 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி