ரோடு வேலை, மணல் அள்ளும் வேலை செய்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி

73பார்த்தது
ரோடு வேலை, மணல் அள்ளும் வேலை செய்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட இளைஞனான நடராஜன், இன்று இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக மாறியவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர், ' ரோடு வேலைக்குப் போயிருக்கேன், மணல் அள்ளும் வேலைக்குப் போயிருக்கிறேன்.நிறைய கஷ்டங்களுக்கும், தடைகளுக்கும் மத்தியில்தான் என் கனவை அடைந்தேன். அதனால், எதையும் தடையாக, கஷ்டங்களாகப் பார்க்காதீர்கள். நீங்கள் எந்தத் துறையையும் தேர்ந்தெடுத்து கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி