குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஓடும் பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. விவேக் ராம்வானி என்ற இளைஞன் தன் காதலியை பைக்கின் முன்புறம் அமரவைத்து இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டே பைக்கில் சென்றுள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்ட நிலையில், பைக் நம்பரை வைத்து இளைஞரை போலீசார் கண்டுபிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளைஞரை மன்னிப்பு வீடியோவும் வெளியிட வைத்துள்ளனர்.