அயோத்தி கோயிலில் 3,800 விளக்குகள் திருட்டு!
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோயில் நடைபாதையில் அமைக்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 3,800 மூங்கில் விளக்குகள் மற்றும் 36 Projector LED விளக்கு திருட்டு போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோயில் நடைபாதையில் அமைக்கப்பட்ட விளக்குகள் தொடர்ந்து திருடு போவதாக ஆகஸ்ட் 9ம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடந்து வருகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட நாணில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன.