கர்நாடக மாநிலம் மங்களூரு உச்சிலா கடற்கரைக்கு அருகே ஒரு தனியார் பீச் ரிசார்ட் அமைந்துள்ளது. அங்கு, மைசூரைச் சேர்ந்த நிஷிதா (21), பார்வதி (20) மற்றும் கீர்த்தனா (21) ஆகிய இளம்பெண்கள் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது 6 அடி ஆழ நீச்சல் குளத்தில் முதலில் ஒரு பெண் மூழ்கிய நிலையில், காப்பாற்ற முயன்று மற்ற இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.