தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 2ஆயிரத்து 553 மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரி 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக 24ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதிகப்படியான விண்ணப்பம் வந்துள்ளதால் இரண்டு கட்டங்களாக இந்த மருத்துவ தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.