3 சிறுமிகள் கோயில் குளத்தில் விழுந்து பலி

78பார்த்தது
3 சிறுமிகள் கோயில் குளத்தில் விழுந்து பலி
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வடமலாப்பேட்டை எஸ்பிஆர் புரத்தில் சிவன் கோயில் உள்ளது. அந்த கோயில் குளத்தில் தீபம் ஏற்றுவதற்காக சாந்தி என்ற பெண் தனது மூன்று மகள்களுடன் இன்று (மே 16) சென்றுள்ளார். அப்போது குளத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி சென்றபோது, எதிர்பாராத விதமாக சாந்தியின் மூன்று மகள்களான சரிதா (13), ரூபாகா (10), ரிஷிகா (9) ஆகியோர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழுவினர் குளத்தில் இருந்த சிறுமிகளை சடலங்களாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி