மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், 3 நாட்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து, மகாவிஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.