விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் கிராமத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற
சஞ்சய் (10), சகோதரிகள் பிரியதர்ஷினி (10), சுபஸ்ரீ (8) ஆகியோர் ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஓடையைக் கடந்து செல்ல முயன்றபோது நீரில் மூழ்கி மூவரும் உயி
ரிழந்துள்ளனர். இந்த நிலையில், குழந்தைகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.