கடந்த 2 ஆண்டுகளில் குட்கா கறை தடுப்பு மற்றும் ரயில்வேயை சுத்தம் செய்ய செலவழித்தது குறித்து காங்கிரஸ் எம்பி நீரஜ் மக்களவையில் நேற்று (ஜூலை 26) கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில், வளாகத்தில் குப்பை மற்றும் எச்சில் துப்பியதற்காக 3.30 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.5.13 கோடி வசூலிக்கப்பட்டது” என அவர் பதிலளித்துள்ளார்.