சமீப நாட்களாக புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜயின் "தமிழக வெற்றிக் கழகம்" நாம் தமிழர் கட்சியோடு 2026 ஆம் ஆண்டு கூட்டணி வைக்கும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அதைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக, சீமானும் விஜய்யுடன் கூட்டணி வைக்க காத்திருக்கிறேன் என வெளிப்படையாக பேசினார். இதனிடையே, இன்று வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஜய், அதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை மட்டும் குறிப்பிட்டு பேசியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. இதன் மூலம், 2026 சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட இளைஞர்கள் ஓட்டை வாங்க நாம் தமிழர் கட்சியையும், பட்டியலின சமூக மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.