2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்பு குழுவுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்., 08) இரவு ஆலோசனை நடத்துகிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர், திமுக ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.