திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்

1578பார்த்தது
திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு புதிதாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்ப காலத்தில் மக்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருந்தன. அதன் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் 2023 மே 19ம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. டிச.29ம் தேதி, ரூ.9,330 கோடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது, 97.38% திரும்பப் பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரூ.2,000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளது.