மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் மரணம்

22266பார்த்தது
மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். வெளியகரத்தில் கோவிந்தராஜ் என்பவரது கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் பார்த்தசாரதி (20), சாய்குமார் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அவ்வழியாக சென்றுள்ளனர். மின்வேலி அமைத்துள்ளது தெரியாமல் வயல்வெளியில் இறங்கிய போது அதில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர். தோட்டத்தின் உரிமையாளர் கோவிந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி