+2 முடிவுகள்: மகளிர் பள்ளிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்

58பார்த்தது
+2 முடிவுகள்: மகளிர் பள்ளிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்
தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் தேர்ச்சி விகிதம் 4.07% அதிகமாக உள்ளது. பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்: அரசுப்பள்ளிகள் - 91.32%, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 95.49%, தனியார் பள்ளிகள் - 96.7%, மகளிர் பள்ளிகள் - 96.39%, ஆண்கள் பள்ளிகள் - 86.96%, இருபாலர் பள்ளிகள் - 94.7%.

தொடர்புடைய செய்தி