2 பீருக்கே போதையா? ஜிம் பயிற்சியாளர் கொலையில் பகீர் வாக்குமூலம்

72பார்த்தது
2 பீருக்கே போதையா? ஜிம் பயிற்சியாளர் கொலையில் பகீர் வாக்குமூலம்
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் மணிகண்டன் (எ) விக்கி என்ற ஜிம் பயிற்சியாளர் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக அசோக், கார்த்தி, ஸ்ரீகாந்த் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், விக்கியுடன் நாங்கள் நண்பர்களாக இருந்தோம். விக்கியின் உறவினர் துக்க நிகழ்வில் மது அருந்தினோம். அப்போது, `2 பீருக்கே உனக்கு ஏறிடுச்சே. நீ எல்லாம் என்ன ஜிம் மாஸ்டரா’ என விக்கியிடம் கேட்டதற்கு எங்களை அடித்தான். அதில் கோபமடைந்து கற்களால் அவனை அடித்துக் கொன்றோம்” என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி