பழனி முருகன் கோவிலில் காணிக்கை ரூ.2.35 கோடி வரவு

66பார்த்தது
பழனி முருகன் கோவிலில் காணிக்கை ரூ.2.35 கோடி வரவு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியல்கள் பக்தர்கள் கூட்டம் காரணமாக 19 நாட்களில் நிரம்பியது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.2 கோடியே 35 லட்சத்து 19 ஆயிரத்து 429 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 474 கிராமும், வெள்ளி 9 ஆயிரத்து 70 கிராமும் கிடைத்தது.
Job Suitcase

Jobs near you