24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம்? சகலகலா வல்லவி

88439பார்த்தது
24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம்? சகலகலா வல்லவி
இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்த பார்பரா ஐயோல் (வயது 50), அரசை சுமார் 24 ஆண்டுகளாக ஏமாற்றி மகப்பேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம் தரித்ததாகவும், இதில் 5 குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும், 12 முறை கரு கலைந்ததாகவும் கூறி அரசிடம் இருந்து நிதிப்பயன்களை பெற்றுள்ளார். அரசு சலுகைகள் மூலம் இந்திய மதிப்பில் 98 லட்சம் ரூபாய் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயிற்றில் தலையணையை வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் என கூறி அவருக்கு 1 ஆண்டு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி