16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை?

80பார்த்தது
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை?
சிவகங்கை மாவட்டம் கல்குளம் பகுதியில் பால்சாமி(வயது 72) என்பவரின் தோட்ட கிணற்றில் நேற்று(அக்.24) காலை 16 வயது மதிக்கத்தக்க சிறுமியின் சடலம் மிதப்பதாக சிவகங்கை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறை உதவியுடன் சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். அச்சிறுமியின் கைகள் உடைக்கப்பட்டும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி