ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்குதல்.. 15 வயது சிறுவன் பலி

73பார்த்தது
ரஷ்ய ஆளில்லா விமானம் தாக்குதல்.. 15 வயது சிறுவன் பலி
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு, உக்ரைனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற பல பகுதிகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யா இதுவரை 90 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி