அமலாக்கத்துறையின் 132 வழக்கு.. ஒருவருக்கு மட்டும் தண்டனை

62பார்த்தது
அமலாக்கத்துறையின் 132 வழக்கு.. ஒருவருக்கு மட்டும் தண்டனை
5 ஆண்டுகளில் அரசியல் தலைவர்களுக்கு எதிராக 132 பணமோசடி வழக்குகளை பதிவு செய்த அமலாக்கத்துறை, ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்றுத் தந்துள்ளது என மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 132 வழக்குகளில், 5 வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிக்கப்பட்டு, அதில் ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.