இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸ் பகுதியில் ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஹிஸ்புல்லாவை எச்சரித்தார். இதனிடையே இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என ஹிஸ்புல்லா திட்டவட்டமாக மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.