கார் விபத்து- 11 வயது சிறுவன் உயிரிழப்பு

60பார்த்தது
பர்கூர் அருகே சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அங்கிநாயணப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி ஒரு முறை பல்டி அடித்து, எதிர் திசையில் சென்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

நன்றி: தினகரன்

தொடர்புடைய செய்தி