ஆன்லைன் ஆர்டர் பார்சலுக்குள் பாம்பு வந்ததால் பேரதிர்ச்சி!

9843பார்த்தது
பெங்களூவைச் சேர்ந்த தம்பதி அமேசானில் ஆர்டர் செய்த Xbox Gaming Controller டெலிவரி பார்சலுக்குள் பாம்பு இருந்ததால் அதனை வாங்கியவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பேக்கேஜ் டேப்பில் பாம்பு சிக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, அந்த தம்பதியினர் சமூக ஊடகங்களில் வீடியோவைப் பகிர்ந்தனர். இதற்கு பதிலளித்த அமேசான், அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, தொகையை திருப்பி அளித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு குறித்து நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதன் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி