"திமுக ஆட்சியில் 11 பெண் ஓதுவார்கள் நியமனம்"

82பார்த்தது
"திமுக ஆட்சியில் 11 பெண் ஓதுவார்கள் நியமனம்"
3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 11 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தாம்பரம் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனபுரீஸ்வரர் கோயிலில் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் 29 கோவில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 11 பேர் பெண்கள்" என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

தொடர்புடைய செய்தி