மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.100 மதிப்பு நினைவு நாணயத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும்,
திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி, நினைவு நாணயம் வெளியிட மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று 100 ரூபாய் நாணயத்தை வடிவமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனை விரைவில் ரிசர்வ் வங்கி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.